தோழனே / தோழியே
அதிகாலை சூரியனாய் வந்து
என் வாழ்வை விடியச் செய்தாய் !
உன் சூரிய ஒளி பார்வையால்
என் இதய மலரை மலரச் செய்தாய் !
காலைத் தென்றலாய் என்
இதயத்தை குளிரச் செய்தாய் !
இத்தனையும் செய்த நீ
உன் மௌனதீயால்
ஏன் என்னை வேக வைக்கிறாய் ?????
என்றும் அன்புடன்
சுகந்த்
No comments:
Post a Comment